சாந்த சொரூபியாக... கருணை வடிவாக அருள்பாலிக்கும் துர்க்கை

சிறப்புகள் வாய்ந்த, கலையம்சம் நிறைந்த தேனுபுரீஸ்வர் கோயில்...



தேனுபுரீஸ்வர் கோயில்

By:

Submitted: 2019-05-13 21:51:43

தஞ்சாவூர்: சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்கள் கொண்டு சக்தி வாய்ந்த அம்மனாக துர்க்கை எழுந்தருளி அருள்பாலிக்கிறார் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில். இந்த அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது.

தஞ்சாவூர் என்றாலே கோயில்கள் தான் அனைவருக்கும் நினைவில் வரும். அதிலும் கும்பகோணம் என்றால் கோயில் நகரம் என்ற பெயரே பக்தர்கள் நினைவில் மலரும். அந்தளவிற்கு கோயில்கள் நிறைந்த மாவட்டமாக தஞ்சை விளங்குகிறது.

கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளதுதான் பட்டீஸ்வரம். சுவாமிமலை முருகன் கோவிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குதான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது.

சிவஸ்தலமான இக்கோயிலில் பல சிறப்புகள் அமைந்துள்ளன. கலையம்சம் நிறைந்த கோயில், கருணை வடிவமாக காட்சியளிக்கும் அம்மன். 5 நந்திகள் என்று பல சிறப்புகள் கொண்டது இந்த தலம். இக்கோயிலில் அருள்பாலிக்கும் சுவாமிக்கு தேனுபுரீஸ்வரர் என்ற பெயர். இறைவி பெயர் பநீஞானாம்பிகை, பநீபல்வளைநாயகி. பதிகம் பாடியவர் திருஞானசம்பந்தர்.

தலத்தின் பெயர் காரணம்:

தேவலோகப் பசு காமதேனுவின் மகள் பட்டி இத்தலத்தில் இறைவனை பூஜித்ததால் இத்தலம் பட்டீஸ்வரம் என பெயர் பெற்றது. திருமலைராயனாற்றின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்திலுள்ள இக்கோயில் கிழக்கு மேற்காக 650 அடி நீளமும், தெற்கு வடக்காக 295 அடி நீளமும் உடையது என்றால் பார்த்துக் கொள்ளுங்க....

5 பெரிய உயரமான கோபுரங்களும் 3 பிரகாரங்களும் உடையது. பிரதான கோபுரம் 7 நிலைகளையும் மற்ற கோபுரங்கள் 5 நிலைகளையும் கொண்டது. கோயிலின் முதல் பிரகாரத்தில் உள்ள நடு மண்டபத்தில் மூலவர் பட்டீசுவரர் சன்னதி உள்ளது.

வெளியில் சோமாஸ்கந்தரும், சுற்றிலும் சப்த கன்னிகைகள், மகாலிங்கம், ராமலிங்கம், லக்ஷ்மி, சண்டிகேசுவரர், நடராஜர், சூரியன், ரேணுகாதேவி, சுவர்ண விநாயகர் மற்றும் நவக்கிரகங்களின் சன்னதிகள் உள்ளன.

கலையம்ச மண்டபம்:

வடபுறத்தில் அம்மன் ஞானாம்பிகை சன்னதி உள்ளது. இந்த சன்னதியில் உள்ள மண்டபடம் மிகவும் கலையம்சம் கொண்டது. மண்டத் தூண்களில் உள்ள யாளிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மண்டபத்தின் நடுவில் மேலே கல்லாலான ஊஞ்சல் சங்கிலி உள்ளது. ஒரே கல்லாலான சக்கரம் சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டு உள்ளது பெரிய கலையம்சம் ஆகும்.

தலப் பெருமைகள்:

பராசக்தி தனித்து தவம் செய்ய இத்தலத்தை தேர்ந்தெடுத்தார். தொடர்ந்து பூஜித்து வர இறைவன் பராசக்தியின் தவத்தால் மனம் இரங்கி தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம் என்பது ஐதீகம்.

விசுவாமித்திர முனிவர் காயத்ரி சித்திக்கப் பெற்று பிரம்மரிஷி என்ற பட்டத்தை பெற்றதும் இத்தலத்தில்தான். வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை ராமர் இங்கு தன் வில்லின் முனனயால் கோடிதீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கிக் கொன்டார் என்கிறது புராணம்.

இத்தலத்தில் ராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் ராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது. மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்திலுள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் நீங்க பெற்ற பெருமையும் இத்தலத்திற்கே உரியது.

ஐந்து நந்திகள்... விலகிய நந்திகள்...

இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. இவை அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளதுதான் பெரும் சிறப்பு. திருவலஞ்சுழி, பழையாறை, மேற்றளி, திருச்சத்தி முற்றம் ஆகிய தலங்களிலுள்ள இறைவனைப் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் வந்த திருஞானசம்பந்தருக்கு வெயிலின் கொடுமை தாக்காமல் இருக்க இத்தலத்து இறைவன் சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அளித்தார். அதுமட்டுமா? சம்பந்தர் தன்னை தரிசிக்க வரும்போது நந்தி மறைக்காமல் இருக்க நந்தியெம் பெருமானை விலகி இருக்கச் சொல்லி அருளிய சிறப்புடையது.

கருணை வடிவான துர்க்கை அம்மன்:

வெளிப் பிராகாரத்தில் வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. பட்டீஸ்வரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது.

அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை. சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீஸ்வரம் கோயிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

பட்டீஸ்வரம் துர்க்கையை பக்தர்கள் ராகுகால நேரங்களிலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுதலைச் சிறப்பாக கருதுகின்றனர். துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்கள் கொண்டு அருள் பாலிக்கிறாள்.

மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்ம வாகனம் வலப்புறம் நோக்கி காணப்படும்.

ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்மவாகனம் இடப்புறம் நோக்கி அமைந்துள்ளது. அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள். இந்த அம்மனை தரிசிப்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

இக்கோயிலில் ஆனி மாதம் முதல் தேதியில் திருஞானசம்பந்தருக்குச் சிவபெருமான் பூதகணங்கள் மூலம் முத்துப்பந்தல் அளிக்கும் விழா நடக்கும் சிறப்பு இத்தலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி அமாவாசை நாளில் பஞ்ச மூர்த்திகள் பல வாகனங்களில் புறப்பட்டு வீதிவலம் வந்து கோடி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுப்பர். ராமருக்கு ஏற்பட்ட சாயஹத்தி தோஷம் நீங்கப் பெற்ற ஐதீகத்தின் காரணமாக இவ்விழா நடக்கிறது.

தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இக்கோயில் திறந்திருக்கும்.


Updated: 2019-05-19 16:54:45

Related Articles

Banner
Banner

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

1

more >>

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

1

more >>

Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet.
Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet.
Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum. Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Duis autem vel eum iriure dolor in hendrerit in vulputate velit esse molestie consequat, vel illum dolore eu feugiat nulla facilisis at vero eros et accumsan et iusto odio dignissim qui blandit praesent luptatum zzril delenit augue duis dolore te feugait nulla facilisi. Lorem ipsum dolor sit amet,

Products

Contact