Thursday 18th of April 2024 03:14:19 PM GMT

LANGUAGE - TAMIL
இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும்!

இலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும்!


இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர்,

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும், அவர்களது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவும் முன்னெடுக்கப்படக் கூடிய செயற்பாடுகளுக்கு எதிர்காலத்தில் தொழில்கட்சி அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

படுகொலைகளின் பத்தாவது வருடத்தை நினைவுகூரும் இந்தச் சந்தர்ப்பம் மிகவும் கவலைக்குரியது. அட்டூழியங்கள் செய்யப்பட்டன என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம்.

மனித உரிமை மீறல்களுக்கு ஒரு முடிவு வேண்டும். அட்டூழியங்களுக்குப் பொறுப்புக் கூறப்பட வேண்டும். அரசியல் இணக்கத் தீர்வொன்று காணப்பட்டு, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். நிலைபேறான சமாதானத்திற்கு இது முக்கியமானதாகும் என்று கொர்வின் கூறியிருக்கிறார்.

எதிர்காலத்தில் பிரிட்டனில் பதவிக்கு வரக்கூடிய தொழில்கட்சி அரசாங்கம் இலங்கைக்கான வர்த்தக மற்றும் ஆயுத விற்பனை தொடர்பில் இராஜதந்திர நெருக்குதல்களைப் பிரயோகிக்கும். மனித உரிமைகள் தொடர்பான பொறுப்புக்கூறல்களுக்கு வற்புறுத்தும். கொடூரமான யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் இலங்கையின் வடக்கில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை இன்று (நேற்று) நாம் நினைவுகூருகிறோம்.

அவர்களின் நினைவாக அட்டூழியம் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கோருகின்றோம் என்று குறிப்பிட்ட தொழிற்கட்சித் தலைவர், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களையும் அதற்குப் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளையும் கடுமையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE