Friday 29th of March 2024 07:43:46 AM GMT

LANGUAGE - TAMIL
யாருக்கு ஜோடி நயன்தாரா? தாதாவின் மகளா நிவேதா தாமஸ்? பேட்ட படத்தின் அப்டேட்!

யாருக்கு ஜோடி நயன்தாரா? தாதாவின் மகளா நிவேதா தாமஸ்? பேட்ட படத்தின் அப்டேட்!


பேட்ட படத்தின் செம ஹிட்டை அடுத்து இயக்குனர் முருகதாஸின் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இந்த படம் ஆரம்பம் ஆனது முதல் படப்பிடிப்பு வரை தினமும் ஏதாவது செய்திகள் வெளி வந்துக் கொண்டேதான் உள்ளது. முதன்முறையாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் போது ரசிகர்கள் எடுத்த படங்கள் இணையத்தில் உலா வந்து செம வைரல் ஆனது. இதனால் படப்படிப்பு குழுவிற்கு அதிர்ச்சி.

அதேபோல் இந்த படத்தில் என்கவுண்டர் போலீசாக ரஜினி நடிக்கிறார். அவருக்கு இரட்டை வேடம் என்றும் செய்திகள் உலாவந்தன. இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். ஆனால் இவர் ரஜினிக்கு வில்லியாக நடிக்கிறார். படையப்பா படத்தில் எப்படி ரம்யாகிருஷ்ணன் வேடம் பேசப்பட்டதோ அதேபோல் தர்பார் படத்தில் நயன்தாரா வேடம் பேசப்படும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறாராம். ஆனால் இவரது அம்மாவாக நயன்தாரா நடிக்கவில்லை. என்கவுண்டர் போலீசாக நடிக்கும் ரஜினியின் !ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். தாதாவாக நடிக்கும் மற்றொரு ரஜினி கதாபாத்திரத்தின் மகளாகதான் நிவேதா நடிக்கிறார். நடிக்கிறார் என்று தகவல்கள் உலா வருகின்றன.

இருப்பினும் வழக்கம் போல் மவுனம் காத்து வருகிறார் இயக்குனர் முருகதாஸ். இந்த செய்திகளில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என்பதை அவர் தெரிவித்தால் மட்டுமே உண்டு என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE