Thursday 28th of March 2024 01:39:12 PM GMT

LANGUAGE - TAMIL
ஜோனதன்
புத்தகம் வாசித்தால் முடிதிருத்துவது இலவசம்..!

புத்தகம் வாசித்தால் முடிதிருத்துவது இலவசம்..!


பென்சல்வேனியாவை சேர்ந்த ஜோனதன் எஸ்குயிடா ‘குட்ஸ் டவுன்’ பகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். ‘தி சிட்டி கட்ஸ்’ என்ற பெயரில் இயங்கும் இந்த சலூனில் முடி திருத்தம் செய்ய சிறுவர்கள் விரும்புகிறார்கள்.

காரணம் மற்றய சலூன்களில் கட்டணம் செலுத்தி முடிதிருத்தம் செய்ய வேண்டும் என்றால் ஜோனதனின் சலூனில் சிறுவர்கள் இலவசமாகவே முடிதிருத்தம் செய்து கொள்ளலாம். அதேசமயம் இலவசமாக முடிதிருத்தம் செய்து கொள்ளும் சிறுவர்களுக்கு ஜோனதன் 3 டாலர்களை பரிசாகவும் கொடுக்கிறார்.

‘‘இலவசமாக முடி திருத்தம் செய்யும் எனக்காக ஒன்றை மட்டும் செய்யுங்கள். அதாவது முடிதிருத்த வேலைகளின் போது நான் கொடுக்கும் புத்தகத்திலிருந்து சில பகுதிகளை மட்டும் சத்தமாக வாசித்து காண்பியுங்கள். உங்களுக்கு முடிதிருத்தமும் இலவசம். அதோடு 3 டாலர்கள் அன்பளிப்பும் உண்டு என்று ஜோனதன் கேட்டுக்கொள்கிறார்.

இவ்வாறான வித்தியாசமான செயற்பாடு குறித்து ஜோனதன் என்ன சொல்கிறார்.!

இக்காலத்து இளைஞர்கள் மேடை நிகழ்ச்சிகள் கல்லூரி நிகழ்ச்சிகளில் பெரும் திரளான மக்கள் கூட்டத்திற்கு முன்பாக பேச வெட்கப்படுகிறார்கள், பயப்படுகிறார்கள்.

அவர்களுக்கு பொது இடங்களில் பேச கற்றுக்கொடுப்பதற்காகவே இத்தகைய சலுகையை வழங்கியிருக்கிறேன்’’ என்கிறார் ஜோனதன்.


Category: வாழ்வு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE