Friday 29th of March 2024 05:36:27 AM GMT

LANGUAGE - TAMIL
பேடி அப்டன்
மனந்திறக்கும் பேடி அப்டன்...!

மனந்திறக்கும் பேடி அப்டன்...!


இந்திய அணியின் உளவியல் பயிற்சியாளராக இருந்த பேடி அப்டன் என்ற தலைப்பில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்த புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் இருக்கும் சில விடயங்களை அப்டன் சுவாரஸ்யமாகத் தெரிவித்துள்ளார்.தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பேடி அப்டன் கடந்த 2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபோது அணியில் உளவியல் பயிற்சியாளராக இருந்தார். கேரி கிர்ஸ்டனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் உடையவர்.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியஅணியில் எனக்கு பல்வேறு பணிகள் வழங்கப்பட்டிருந்தன. முக்கியமாக வீரர்களின் மனநிலையை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுகுறித்த பயிற்சி அளிப்பது பிரதானமாக இருந்தது. அணியில் உள்ள வீரர்கள் செயல்படுவதற்கான புதிய கலாச்சாரத்தை உருவாக்க நான் துணை செய்தேன் என்று நம்புகிறேன்.

அப்போது இருந்த இந்தியஅணி அற்புதமாக இருந்தது. 11 வீரர்களும் பல்வேறு விதங்களில் பங்களிப்பு செய்தார்கள்.வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர் ,சச்சின், கோலி ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டனர். . இந்த கால கட்டத்தில்தான் தோனி புகழின் உச்சிக்குச் சென்றார். தோனியின் அமைதி, சுய கட்டுப்பாடு, தெளிவு ஆகியவற்றால் மற்ற வீரர்கள் மீது எளிதாக தாக்கத்தை ஏற்படுத்திவிடுவார். மற்றவீரர்களையும் அமைதிப்படுத்திஇ கட்டுப்படுத்தக்கூடியவர். . அதிலும் அதிக அழுத்தம் நேரத்தில் தோனி அருமையாக கையாண்டு வெற்றிக்கு வழிகாட்டுவார்.

விராட் கோலி ஏராளமாக கற்றுக்கொண்டு, புரிந்து கொண்டு தேவைக்கு ஏற்றாற்போல் அதை துடுப்பாட்டத்தில்செயல்படுத்தக்கூடியவர் இம்முறை உலகக் கோப்பையை பொறுத்தவரை இங்கிலாந்து அணிக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது. சொந்தமைதானம் என்பது கூடுதல் பலம்.

இந்தியாவும் கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடுகிறது. நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். கோலி, தோனி போன்ற மேட்ச் வின்னர்கள் இருப்பது எந்த நேரத்திலும் முடிவை மாற்றிவிடுவார்கள். மூன்றாவதாக அவுஸ்ரேலியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்பின் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அல்லது நியூசிலாந்து அணியைக் கூறலாம். என அப்டன் பல விடயங்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE