Thursday 28th of March 2024 04:03:21 AM GMT

LANGUAGE - TAMIL
கனேடிய பாராளுமன்ற வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (காணொளி)

கனேடிய பாராளுமன்ற வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (காணொளி)


மே - 18 பத்தாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கனேடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கனேடிய பாராளுமன்ற வளாகத்தில் கடந்த பதினைந்தாம் திகதி நடைபெற்றுள்ளது.

பெருமளவானர்கள் பங்கு பற்றிய இந்நிகழ்வில் சுமார் இருபதுக்குக்கும் அதிகமான கனடிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்பங்கு பற்றியிருந்தனர். நிகழ்வு பாராளுமன்ற வளாகத்திலுள்ள வலர் கட்டிடத்தில் அறை இலக்கம் 268 இல் குறித்த நேரப்படி மாலை 5 மணிக்கு ஆரம்பமானது.

இந்நிகழ்வில் பங்கு பற்றுவதற்கென வேலை நாளென்பதையும்பொருட்படுத்தாது ஒன்ராறியோ, கியூபெக் மாகாணங்களிலிருந்து பல இளைய, முதிய ஈழத்தமிழர்கள் வந்திருந்தனர். அத்தோடு மத்திய பாராளுமன்றத்தின் பல கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும்அவர்களது உதவியாளர்கள், பணியாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வை செல்வி ரவீணா ரவீந்திரன் அவர்கள் தொகுத்து வழங்கினார். கனடிய தேசிய கீதத்தையும், தமிழ்த் தாய் வாழ்த்தையும் 'சூப்பர் சிங்கர்' புகழ் ஜெசிக்கா ஜூட் அவர்கள் இசைத்து முடிய முள்ளிவாய்க்காலில் அகாலமாய்ப் பறிக்கப்படட உயிர்களை நினைவேந்தி ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்துவதோடு நிகழ்வு ஆரம்பமானது.

ஓட்டாவாவிலிருந்து இந்து குருக்கள் விஸ்வநாதன் தட்ஷணாமூர்த்தி அவர்களும் மொன்றியாலிலிருந்து கத்தோலிக்க தமிழ்ப் பங்குத் தந்தை ஜூட் நிக்சன் அவர்களும் நிகழ்வில்கலந்துகொண்டு மரணமானவர்களின் ஆத்ம சாந்திக்காக இறையருளை மன்றாடினார்கள்.

இதைத் தொடர்ந்து கனடிய தமிழர் பேரவையின் தலைவர் திரு சிவன் இளங்கோ வரவேற்பு, நிகழ்வின் நோக்கம், முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பின்னான இன்றய நிலைமை, தீர்வொன்றுக்காகஎங்கும் மக்களின் எதிர்பார்ப்பு, ஐ.நா. மற்றும் கனடா முதற்கொண்டு உலக நாடுகளின் செயற்பாடுகள் பற்றி விரிவான உரையொன்றை ஆற்றினார். அதையடுத்து கனடிய இசைக்கலைஞர் திரு வர்ணா ராமேஸ்வரம் அவர்கலால் முள்ளிவாய்க்கால் அவலங்களைக் கூறும் பாடலொன்று இசைக்கப்பட்டது. சபையிலிருந்தோர் பலரது கண்களில் நீரை வரவழைத்திருந்தது இப் பாடல்.

இதன் பின்னர் கனடிய அரசின் அமைச்சரும் ஆளும் லிபரல் கட்சியின் மார்க்கம் - தோர்ன்ஹில் தொகுதியின் பிரதிநிதியுமான மேரி எங் உரையாற்றினார். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான தமிழரின்இன்றய நிலைமை பற்றி உணர்வு பூர்வமாகப் பேசினார். இந்த நிகழ்வைப் பாராளுமன்ற வளாகத்தில் நடத்துவதற்கான அனுமதியையம் இவரே பெற்றுத் தந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேரி எங் கைது தொடர்ந்து கனடிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஆர்னோல்ட் வியெர்சன் அவர்களும் என்.டி.பி. கட்சியின் மூத்த உறுப்பினரும் தமிழர்களின்நண்பருமான திரு பீற்றர் ஜூலியன் அவர்களும் தத்தம் கட்சிகளின் சார்பாக உரையாற்றினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து பாரம்பரிய உதவி அமைச்சரும் கனடிய தமிழருமான திரு கெரிஆனந்தசங்கரி, கன்சர்வேட்டிவ் கட்சியின் சர்வதேச வர்த்தக பரவலாக்கம் தொடர்பான பேச்சாளர் டீன் அலிசன், முன்னாள் என்.டி.பி கட்சியின் முன்னாள்அவைத்த தலைவர் கி கரோன் அவர்களும் வேறுபல பாராளுமன்ற உறுப்பினர்களும் உரையாற்றினார்கள்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE