Friday 29th of March 2024 07:38:01 AM GMT

LANGUAGE - TAMIL
முன்னாள் கார் பந்தய சாம்பியன் நிக்கி லவுடா
முன்னாள் கார் பந்தய சாம்பியன் லவுடா காலமானார்!

முன்னாள் கார் பந்தய சாம்பியன் லவுடா காலமானார்!


பார்முலா ஒன் கார் பந்தய முன்னாள் சாம்பியன் நிக்கி லவுடா தனது 70 ஆவது வயதில் காலமானார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக்கி லவுடா பார்முலா ஒன் கார் பந்தயத்தில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றவர்.

இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த இவர் 1975 ஆண்டு பார்முலா-1 கார் பந்தயத்தில் சாம்பியன் பட்டம் வென்றார்.

இவருக்கு 1976-ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்திற்கு பிறகு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது.

அந்த விபத்தின் போது அவரது ஃபெராரி கார் கடும் சேதமடைந்ததுடன் அவருக்கும் எலும்பு முறிவுடன் பல தீக்காயங்களும் ஏற்பட்டன.

மெதுவாக அதிலிருந்து மீண்டு மீண்டும் பார்முலா-1 கார் பந்தயப் போட்டிகளில் பங்கேற்று 1977இ 1984 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.

அதன் பின்னர் 1997 முதல் 2005 வரை சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டார்.

இந்த ஆண்டு தொடக்கத்திலும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE