Friday 3rd of May 2024 04:19:36 PM GMT

LANGUAGE - TAMIL
விண்வெளி சுற்றுலா
இனி விண்வெளிக்கும் சுற்றுலா போய் வரலாம்...!

இனி விண்வெளிக்கும் சுற்றுலா போய் வரலாம்...!


அடுத்த ஆண்டு முதல் பொதுமக்களும் விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக நாசா தலைமை அதிகாரி கூறுகையில் விண்வெளி சுற்றுலாவுக்கு ஏற்ப விண்வெளியில் மையம் ஒன்று அமைக்கப்பட்டு பயணிகள் அங்கு தங்கவைக்கப்படுவர் என குறிப்பிட்டார். மேலும் இந்த ஆண்டின் இறுதியில் இதற்கான சோதனை பயணம் நடைபெற உள்ளதாகவும் கூறினார். இந்த சோதனைக்கு பின்பு அடுத்த ஆண்டுக்குள் வர்த்தக ரீதியாக விண்வெளி சுற்றுலா செல்வது நடைமுறைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரை விண்வெளி ஆராய்ச்சியாளர்களை மட்டும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்து சென்ற நாசா தற்போது தனிநபர்களை சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்

இதேவேளை விண்வெளியில் சுற்றுப்பயனத்தை மேற்கொள்ள 58 மில்லியன் ரூபா அமெரிக்க டொலர் கோரவுள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 30 நாட்கள் கொண்ட இந்த பயணத்தில் அமெரிக்கர்கள் மட்டுமின்றி மற்றய நாட்டினரும் அனுமதிக்கப்படவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: தொழில்நுட்பம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE