Thursday 18th of April 2024 03:47:20 AM GMT

LANGUAGE - TAMIL
திராட்சை வற்றல்
திடமான உடலுக்கு திராட்சை வற்றல்

திடமான உடலுக்கு திராட்சை வற்றல்


திராட்சையில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.

திராட்சை அதிக அளவில் உற்பத்தியாக கூடிய கோடை காலங்களில் இதன் சுவை சற்று அதிகமாகவே இருக்கும். திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட அதை உலர் பழமாக சாப்பிட்டால் மேலும் இதன் சத்துக்கள் கூடும்.

திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இதுவே உலர் திராட்சை எனப்படுகிறது.

திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.

விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது, உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர நோய் குணமடையும்.

திராட்சையில் உள்ள கால்சியம் எலும்புகள், பற்கள் இவை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.


Category: வாழ்வு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE