Friday 29th of March 2024 04:51:55 AM GMT

LANGUAGE - TAMIL
"நாவல் "
நம் அருகிலேயே இருக்கும் இயற்கை மருத்துவர் நாவல் மரம்

நம் அருகிலேயே இருக்கும் இயற்கை மருத்துவர் "நாவல் மரம்"


இலை, பட்டை, வேர், பழம், விதை என்று அனைத்தும் உடலுக்கு நலம் தரும் ஒன்று இருக்கிறது என்ன தெரியுங்களா? அது நாவல் பழம்... பெரிய சைஸ் கருப்பு திராட்சை போல் இருக்கும் நாவல்பழத்தின் அருமை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... பள்ளிக்கூட வாசலில் பாட்டியிடம் நாவல் பழம் வாங்கி தின்றது ஞாபகம் வருதே... என்று இப்போதும் பாடாத நபர்கள் இருப்பார்களா? நிச்சயம் இருக்க முடியாது. அந்த கால தலைமுறையினரும் சரி... இன்றைய ஸ்மார்ட் போன் கால தலைமுறையினரும் சரி. கண்டிப்பாக நாவல் பழத்தை டேஸ்ட் செய்யாமல் இருந்திருக்கவே முடியாது.

உடலுக்கு குளிர்ச்சியை அள்ளிதரும் நாவல் பழத்திற்கு அந்த பெயர் வந்த காரணம் என்னவென்று தெரியுமா? நாவல் பழத்தைத் தின்றால் நாக்கின் நிறம் ஊதாவாக மாறும். நாக்கு வறண்டு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்போல் இருக்கும். இப்படி நாவின் தன்மையை மாற்றுவதால் 'நா+அல்' (நாவல்) என்று பெயர் வந்ததாக சொல்கின்றனர்.

இந்த நாவல் பழத்தில் சிறிது உப்பும்இ மிளகாய் தூளும் தூவி தருவாங்க பாருங்க... அடடா... டேஸ்ட் செம. இயற்கை அன்னை நமக்கு அள்ளித் தந்த வரப்பிரசாதம் இயற்கை மருத்துவர்தான் நாவல் மரமும், பழமும் என்றால் மிகையில்லை. நாவல் பழத்தை சாப்பிடுவதால் மூளை பலப்படும். ஈரல் நோய் குணமாகும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பழக்கசாயம், வாயுத்தொல்லை நீக்கும். மண்ணீரல் வீக்கம், உடலுக்கும், கண்ணுக்கும் குளிர்ச்சி என்று நாவல் பழம் நம் ஆரோக்கியத்pற்குதவும் வைத்தியராக நம் அருகில் உள்ளது.

சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தின் விதையை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் சிறிதளவு மூன்று வேளை எனத் தண்ணீரில் கலந்து அருந்தி வரவேண்டும். அப்படி செய்வதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

இலை, பழம், விதையின் பயன்கள் இது என்றால்... நாவல்மரப்பட்டை குரல் இனிமையை அதிகரிக்கும். ஆஸ்துமா, தாகம், களைப்பு, குருதி, சீதபேதி, பெரும்பாடு, ஈளை இருமல் ஆகிய நோய்களுக்கும் மிகவும் நல்லது. நாவல் மர பட்டைத் தூளை ரத்தம் வழிகின்ற புண்ணில் தூவ குணமாகும். இந்த மரத்தின் வேரின் பயன் என்ன தெரியுமா?

வாதம், கரப்பான், நீரிழிவு, குருதி, சீதபேதி, வாதகரம், மேகம், செரியாமை ஆகியவற்றைப் போக்கும். இப்படி நுனி முதல் வேர் வரை அருமையான பலன்களை அள்ளித்தருகிறது நாவல்.


Category: வாழ்வு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE