Friday 19th of April 2024 10:13:56 PM GMT

LANGUAGE - TAMIL
ஊடகவியலாளர் ஜமால் கஷோகி
ஜமால் கஷோகி கொலை; பின்னணியில் சவுதி!

ஜமால் கஷோகி கொலை; பின்னணியில் சவுதி!


ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் மரணத்தின் பின்னணியில் சவுதி அரேபிய உயர் மட்ட அதிகாரிகள் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத படுகொலைகள் தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் அக்கெஸ் கலமார்ட், ஜமால்கஜோசி தொடர்பான தனது விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும், அவரது மரணம் தொடர்பாக சர்வதேச தரத்துடன், சுதந்திரமான முறையில் மீள் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜமால் கஷூஷோகி இஸ்ரான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதுவராலயத்திற்குள் வைத்து கொல்லப்பட்டார்.

சவுதி அரேபிய தூதரகத்திற்குள் ஜமால் கசோஜி நுழைந்தவுடன் அவர் மயக்கஊசியினால் தாக்கப்பட்டார் பின்னர் அவரது தலையை பிளாஸ்டிக் பையினுள் வைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தனர் என விசேட அறிக்கையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த கொலை தொடர்பாக மூடிய கதவுகளுக்கு அப்பால் 11 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணை முடிவில் அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இருப்பினும் இந்த ஊடகவியலாளரின் கொலை தொடர்பாக சர்வதேச நடைமுறை பின்பற்றப்படவில்லை என பல மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE