Wednesday 24th of April 2024 10:58:54 PM GMT

LANGUAGE - TAMIL
யாழில்.இலஞ்சம், ஊழல் தொடர்பிலான பயிற்சிப் பட்டறை (காணொளி)

யாழில்.இலஞ்சம், ஊழல் தொடர்பிலான பயிற்சிப் பட்டறை (காணொளி)


இலஞ்சம் மற்றும் ஊழல் சட்டங்கள் தொடர்பில் அரச அலுவலர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் அறிவூட்டும் பயிற்சிப்பட்டறை இன்று புதன்கிழமை யாழில் நடைபெற்றது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் திணைக்களம், நீதியானதும் சுதந்திரமானதுமானதேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் ஏற்பாட்டில் அந்த அமைப்பின்யாழ் மாவட்ட இசைப்பாளர் எஸ்.தினேஸ் தலைமையில் இன்று யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சரத்துக்களை ஆய்வுசெய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜெயமாலன, கபேஅமைப்பின் பதில் நிறைவேற்று பணிப்பாளர் மொகம்மட் மனாஷ் மகீன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கியிருந்தனர்.

இந் நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின்பிரதிநிதிகள், அரச அலுவலர்கள், கபே அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இலஞ்சம் மற்றும் ஊழல் சட்டங்கள் தொடர்பான சரத்துக்களைஆய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் மற்றும் கபே அமைப்பின்பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆகிய இருவரும் ஊடக சந்திப்பு ஒன்றையும்நடாத்தியிருந்தனர்.

இதன் போது இலஞ்சம் மற்றும் ஊழல் சட்டங்கள் தொடர்பான சரத்துக்களை ஆய்வுசெய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவுக்கையில்...

இலஞ்சம் மற்றும் ஊழல்கள் ஒழிப்பதற்கான செயறதிட்டமொன்றைஆரம்பித்திருக்கின்றோம். நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களால் இதன்பணிகளை விரைவாக முன்னெடுப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டு இருந்தன.

இவ்வாறான நிலையில் இதன் பணிகளை முழு வீச்சில் முன்னெடுக்கின்றநடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அரச பணியிடங்களில் இடம்பெறும் இலஞ்ச ஊழல்குற்றங்களை தடுப்பதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறானகுழுக்கள் ஊடாக இலஞ்ச ஊழல்களை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.ஆனாலும் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு தண்டனைவழங்குகின்ற அதே நேரத்தில் அவர்களது மனரீதியான மாற்றங்களும் செய்வது மிகஅவசியம். இஅதனூடாக இலஞ்ச ஊழல்களை ஒழிக்க முடியும்.

இவ்வாறு நாட்டில் இலஞ்ச ஊழலை இல்லாதொழிப்பதறகுரிய செயற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்தோடு இலஞ்ச ஊழல் ஒழிப்புதொடர்பில் விரைவில் சுற்று நீரூபமொன்றும் வெளியிடப்படவுள்ளது. ஆகவே இவைதொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென்றார்.

இதற்கமைய சகல அரச நிறுவனங்களிலும் இலஞ்ச ஊழலை ஒழிப்பதற்கானகுழுவை அமைப்பதற்கும் அதனைக்கண்கானிப்பதற்கும் ஒருவரை நியமிப்பதற்கும்ஐனாதிபதி செயலகத்தால் விரைவில் சுற்று நிரூபர் வெளியிடப்பட உள்ளது என்றார்.

இதேவேளை கபே அமைப்பின் பதில் நிறைவேற்று பணிப்பாளர் மொகம்மட் மனாஷ் மகீன் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கையில்...

ஆணைக்குழுவும் கபே அமைப்பும் இணைந்து பொது மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகளை வடக்கில் தொடர்ச்சியாகமேற்கொள்ள உள்ளோம்.

இதற்கமைய யாழில் இன்று மேற்படி ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விளக்கமளித்திருந்தார் .

அது போல தொடர்ந்தும் பத்து தினங்கள் வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதன் போதும் வளவாளர்களாக பலரும் கலந்து கொண்டு விளக்கமளிக்க உள்ளனர்.அனைத்துபிரசைகளுக்கும் விழிப்புணர்வு தேவை என்ற அடிப்படையில் இந்தப் பணிகளைதொடர்ந்தும் பல இடங்களிலும் முன்னெடுக்க இருக்கிறோம்.

இலஞ்சம் பெறுவதும் குற்றம், இலஞ்சம் கொடுப்பதும் குற்றம், பாலியல் தீண்டல்களும் குற்றம் தான். இவ்வாறான குற்றங்கள்தொடர்பில் பல முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கிறது.

அதனால் தான் நாம் இந்தநடவடிக்கை எடுத்து உள்ளோம். நாட்டை முன்னேற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்பு அவசியம்.இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டும்.

போதைப்பொருள்பாவிக்க கூடியவர்கள் விட அந்தச் செயற்பாட்டில்ஈடுபடுகின்றவர்களால் தாம் தப்பிப்பதற்காக இலஞ்சம் கொடுக்கப்படுகிறது.

இவ்வாறு போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையின் போது அவர்கள் தாம்தப்பிப்பதற்காக இலஞ்சம் கொடுக்கபடுகிறது. இதனால் இலஞ்சம் கொடுப்பதும்இலஞ்சம் பெறுகின்ற செயற்பாடுகள் நடக்கிறது.

இதனை இல்லாதவர்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு அவசியமானது.

ஆகவே இந்தச் செயற்பாடுகள் தொடர்பில் தகவல் தெரிந்தால் அதனை வெளிப்படுத்தவேண்டும். ஆனாலும் அவ்வாறு வெளிப்படுத்துவதில் ஏதும் சிக்கல்கள் இருப்பின்பொதுவான முறைப்பாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு நேரடியாகவேதெரிவிக்க முடியும்.

இதேவேளை நாட்டிலுள்ள ஒன்பது மாகாண சபைகளில் வடக்கு கிழக்கு மாகாணசபைகள் உட்பட எட்டு சபைகளின் காலம் முடிவடைந்து விட்டது. ஆக இப்பஇருக்கின்ற அந்த ஒரு சபையின் காலமும் முடிவடைய சில மாதங்களே உள்ளன.

வடக்கு மாகாண சபை உட்பட மாகாண சபைகளின் தேர்தல் பிற்போடப்பட்டு வருகின்றன.

ஆக மாகாண சபைகளுக்கானதேர்தல்களை நடாத்த அரசாங்கம் அக்கறையற்று இருக்கின்றது.

நல்லலாட்சி என்று செல்லி கொண்டுள்ள இந்த அரசாங்கம் ஐனநாகம்தை சரியாகபிரதிபலிக்கும் போது மாத்திரம் தான் நல்லாட்சி என்று குறிப்பிடலாம். ஆனால்ஐனநாயக ரீதியான தேர்தலை நடாத்தாமல் பிற்போடுகுன்ற இந்த ஆட்சியைநல்லாட்சி என்று கூற முடியாதுள்ளது. ஆகவே ஐனநாயக ரீதியான தேர்தலைநடாத்தி ஐனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும். அவ்வாறு நடாத்துவது தான்ஐனநாயகம்.

தேர்தலை போடுகிறாள் வேலையை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்ற போது அரசிற்கு அழுத்தம் கொடுத்து தேர்தலை நடாத்த வேண்டியபொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கிறது. ஆனால் அதனை எதிர்க்கட்சிகள்செய்யது தவறி வருகின்றன.

கடந்த ஒக்ரோபர் மாதம் புதிய அரசு வந்த போது அந்த அரச்சை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் ஐனநாயகத்திற்கு விரோதம் என்றும் சிறுபான்மை கட்சிகள்மற்றும் தேசிய கட்சிகள் எல்லாம் கூறின. ஆனாலும் மாகாண சபை தேர்தல்நடாத்தப்படாத்து தொடர்பில் ஏதும் கூறாமல் இருப்பது கவலையாக உள்ளது.

இந்தஆட்சியில் முன்னர் எதிர்க்கட்சியாக இருந்தவர்களும் இப்ப எதிர்க்கட்சியாகஇருக்குன்றவர்களும் அது குறித்து உரியவாறு பேசவில்லை அல்லதுசெயற்பாடுகளை முன்னெடுக்கவுல்லை. ஆகவே விரைவாக மாகாண சபை தேர்தலை நடாத்த அரசிற்கு அழுத்தம்கொடுக்குமாறு அனைத்து கட்சிகளிடமும் கோரிக்கை விடுக்கிறோம். அவ்வாறாகதேர்தலை நடாத்துவதே ஐனநாயகம் என்றார்.


Category: உள்ளூர, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE