Friday 19th of April 2024 04:20:53 AM GMT

LANGUAGE - TAMIL
டோனிக்கு நெருக்கடி கொடுக்கிறதா இந்திய கிரிக்கெட் வாரியம்?

டோனிக்கு நெருக்கடி கொடுக்கிறதா இந்திய கிரிக்கெட் வாரியம்?


ஓய்வு அறிவிப்பை வெளியிடாவிட்டால் இனி டோனியை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நெருக்கடியால் டோனி ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்தியாவுக்கு பல்வேறு வெற்றிகளை தேடி தந்தவர் கிரிக்கெட் வீரர் டோனி. இவரை அனைவரும் கூல் கேப்டன் என்றே அழைப்பார்கள். அந்தளவிற்கு தான் கேப்டன் பொறுப்பில் இருந்தபோது அனைவரையும் அரவணைத்து எதற்கு கோபப்படாமல் இருந்தவர் டோனி. இந்தியாவுக்கு 2 உலகக் கோப்பையை (2007-20 ஓவர் கோப்பை, 2011 ஒருநாள் போட்டி) வென்று பெருமை சேர்த்த இவர் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்.

ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடி வருகிறார். தற்போது அவருக்கு 38 வயதாகிறது. நடந்து முடிந்த உலக கோப்பை போட்டியோடு அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் உலகக் கோப்பை போட்டியிலும் அவரது ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கிடையில் ஓய்வு குறித்து தன்னிடம் டோனி எதுவும் பேசவில்லை என்று கேப்டன் விராட்கோலி சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதனால் ஒய்வு பெறும் முடிவை அவர் சில காலத்திற்கு ஒத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை வரை விளையாட டோனி திட்டமிட்டுள்ளராம். ஆனால் இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓய்வு முடிவை அறிவிக்காவிட்டால் இந்திய அணியில் இருந்து டோனியை நீக்க முடிவு செய்து இருப்பதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவரை ஓரங்கட்டுவது என்ற முடிவுக்கு வந்துள்ளது கிரிக்கெட வாரியம். தேர்வு குழு தலைவர் எம்.கே.பிரசாத் இது தொடர்பாக டோனியிடம் பேசுவார். அவரிடம் தானாக ஓய்வு பெறுமாறு வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது. இப்படி ஒரு நெருக்கடி தனக்கு ஏற்ப்டுளளதால் டோனியே முன்வந்து தன் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறுகின்றனர்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE