Thursday 28th of March 2024 07:50:54 PM GMT

LANGUAGE - TAMIL
இஸ்ரேல் பாலைவனத்தில் பழங்கால மசூதியின் சிதிலங்கள் கண்டுபிடிப்பு

இஸ்ரேல் பாலைவனத்தில் பழங்கால மசூதியின் சிதிலங்கள் கண்டுபிடிப்பு


இஸ்ரேலில் உள்ள நெகவ் பாலைவனத்தில் மிகவும் பழமையான மசூதியின் சிதிலங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது கிமு 7அல்லது 8ம் நூற்றாண்டை சேர்ந்தாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் உள்ள ரஹத் நகருக்கு அருகே நெகவ் பாலைவனத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் பலவிதமான ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு மசூதி ஒன்றின் சிதிலங்கள் தென்பட்டுள்ளது. உடன் இதை கவனமாக தோண்டி ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அதில் அந்த மசூதி கிமு 7 அல்லது 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் வசித்த சிறிய விவசாயிகள் இந்த மசூதியைப் பயன்படுத்தியிருக்கக் கூடும் என்றும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. முக்கியமாக இந்த மசூதி மெக்கா உள்ள திசையை நோக்கி கட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த மசூதியில் தொழுகைக்கான இடமும் உள்ளது.

மேலும் மசூதிக்கு அருகில் சில கட்டிட சிதிலங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது அது பைசாண்டியர் காலத்திய குடியேற்றவாசிகளின் பண்ணையாக இருந்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் அந்த பகுதியில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள இருப்பதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE