Thursday 28th of March 2024 06:31:54 PM GMT

LANGUAGE - TAMIL
வடக்கு - கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டம் நாளை ஆரம்பம்

வடக்கு - கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்டம் நாளை ஆரம்பம்


தமிழர் உதைபந்தாட்ட பேரவை மற்றும் "இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம்" ஆகியவற்றின் ஏற்பாட்டில் "வடக்கு கிழக்கு பிறீமியர் லீக் உதைபந்தாட்ட போட்டி" (NEPL) 2019 - இரண்டாவது பருவகால தொடர் நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது.

இந்த போட்டி தொடருக்கான கிண்ண அறிமுகமும், சுற்றுப் போட்டி தொடர்பான விளக்கமளிக்கும் செயதியாளர் மாநாடு நேற்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது.

இது தொடர்பில் இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் ஜஸ்வர் உமர் தெரிவிக்கையில், வடக்கு - கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 12 கழகங்களை உள்ளடக்கியதாக இத்தொடர் நடைபெறவுள்ளது. லீக் சுற்றுக்களாக 60 போட்டிகளும், 7 நொக் - அவுட் போட்டிகளும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள 7 மைதானங்களில் நடைபெறவுள்ளன.

மேலும், இந்த தொடருக்கான பரிசுத்தொகையாக கிண்ணத்தை வென்று சம்பியனாகும் அணிக்கு 50 இலட்சம் ரூபாவும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 25 இலட்சமும், மூன்றாம் மற்றும் நான்காம் இடம் பெறும் அணிகளுக்கு முறையே 10 இலட்சம், 5 இலட்சம் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கைச் சேர்ந்த வீரா்கள் இந்த தொடர்களில் பங்குகொண்டு விளையாடுவதன் மூலம் தமது திறமைகளை சர்வதேச அளவில் வெளிக்கொணர முடியும் என்றார்.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE