Thursday 18th of April 2024 08:49:04 PM GMT

LANGUAGE - TAMIL
த.தே.ம.முன்னணி முரண்பட்டது எதனால்? - சுமந்திரன், சுரேஷ் இணைந்து பதில்!

த.தே.ம.முன்னணி முரண்பட்டது எதனால்? - சுமந்திரன், சுரேஷ் இணைந்து பதில்!


ஆறு கட்சிகளுக்கு இடையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இடம்பெற்ற பேச்சுக்கள் தொடர்பிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியேறியமை தொடர்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்தின், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் ஊடகங்களுக்கு கூட்டாக கருத்துத் தெரிவித்தனர்.

அவர்கள் தெரிவித்தவை வருமாறு,

எம்.ஏ.சுமந்திரன்

நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலிலே போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் அவர்களுடைய அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் சார்பாக குறித்த பொதுவான நிலைப்பாடொன்றை முன்வைக்க வேண்டுமென்கின்ற முயற்சியை பல்கலைக்கழக மாணவர்கள் எடுத்திருந்தார்கள்.

அதற்காக ஆறு தமிழ்க் கட்சிகளை அழைத்திருந்தார்கள்.

இந்தக் கட்சிகளுக்கிடையில் நான்கு அல்லது ஐந்த தடவைகள் இந்தச் சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன.

இன்றைக்கு அதிலே கணிசமான அளவு அது வெற்றியிலேயே முடிந்திருக்கிறது. அதாவது இந்த ஆறு கட்சிகளிலே ஐந்து கட்சிகள் இணைந்து நிலைப்பாடொன்றை ஒற்றுமையாக எடுத்திருக்கிறோம்.

நீண்ட உரையாடல்களுக்குப் பின்னர் இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டிருக்கிறது.

இதனை நாங்கள் பிரதான வேட்பாளர்கள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிற கட்சிகள் முன்பாக வைத்த இது தமிழ் மக்களுடைய ஏகோபித்த நிலைப்பாடு என்று சொல்லக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

ஆகையினாலே இதையொரு பாரிய வெற்றியாக நாங்கள் கணிக்கிறோம். ஆகையினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எங்களுடைய நன்றிகளை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுரேஸ் பிரேமச்சந்திரன்

கடந்த பல வருசங்களாக இல்லாத நிலையில் பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சித்து எல்லாக் கட்சிகளுடனும் பேசி இந்த ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து ஐந்து முறை கூடிப் பேசி மிக நீண்டதொரு பேச்சுவார்த்தையின் பின் முழுமையான ஆவணமொன்றை நாங்கள் தயாரித்திருக்கின்றோம்.

அந்த ஆவணம் என்பது வரக் கூடிய ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுடைய முக்கியமான அரசியல் கோரிக்கைகள் மற்றும் அன்றாடப் பிரச்சனைகள் என இரண்டையும் உள்ளடக்கியதாக அந்தக்கோரிக்கைகள் இருக்கின்றன.

இப்பொழுது நாங்கள் ஒன்றுபட்டு எடுத்திருக்கின்றோம். அதாவது இந்த ஆறு கட்சிகளும் இணைந்து தான் இந்த தீர்மானத்தை நாங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம்.

ஆனால் ஒரு கட்சி ஒரு விடயத்தில் மிகவும் உறுதியாக இருந்ததால் இதில் அவர்கள் கையெழுத்திட முடியவில்லை.

ஆகவே இப்பொழுது நாங்கள் வெளியிடக் கூடிய ஆவணம் என்பதில் ஆறு கட்சிகளும் ஏற்றுக் கொண்ட ஆவணமாகத் தான் இருக்கின்றது.

ஆனால் ஒரு விசயத்தில் ஏனைய கட்சிகளிடத்திலிருந்து வித்தியாசமான கொள்கையைக் கொண்டிருந்ததால் அவர்கள் இதில் கையெழுத்திட மறுத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

அந்த வகையில் தமிழ் மக்களின் ஒட்டு மொத்தமான கோரிக்கைகளாக இவை வெளிப்படுத்தப்படுகின்றது.

ஆகவே நாங்கள் நம்புகின்றோம் இந்த வேட்பாளர்களும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளும் இதற்கு கூடுதலான முக்கியத்துவத்தைக் கொடுப்பார்கள் கொடுக்க வேண்டுமென்று கேட்கின்றோம்.

ஆகையினால் இந்த ஐந்து கட்சிகளையும் சார்ந்த குழுவினர் மிக விரைவாக சம்மந்தப்பட்ட கட்சிகளுடனும் வேட்பாளர்களுடனும் பேசி எங்களது கோரிக்கைகளினுடைய நியாயத்தை நாங்கள் அவர்களுக்கு எடுத்துச் செல்ல இருக்கின்றோம். குறைந்தபட்சம் இதில் ஏதாவது சிலவற்றை நிறைவேற்ற முடியுமாக இருந்தால் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு அது எதிர்காலத்தில் சில பிரச்சனைகளையாவது தீர்ப்பதற்கு உதவியாக இருக்குமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எம்.ஏ.சுமந்திரன்

அப்படி இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படாதவிடத்து என ஊடகவியலாளர்கள் கேட்ட போது.

நாங்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தான் அதைப்பற்றி நாங்கள் தீர்மானிக்கலாம் இப்பவே இப்படி நடந்தால் அப்படி நடந்தால் என்னவென்று தீர்மானங்களை இப்பொழுது எடுக்க முடியாது. ஆனால் ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறோம்.

இந்தப் பேச்சுவார்த்தைகளுடைய பிரதிபலிப்புக்கள் அல்லது அதற்குப் பிறகு வருகிற விடயங்கள் என அவை தொடர்பில் இந்த ஐந்து கட்சிகளும் இணைந்து அப்பொழுது தீர்மானங்களை நாங்கள் எடுப்பதென தீர்மானித்துள்ளோம்.

நாட்டில் புதிதாக உருவாக்க முனைந்த ஒற்றையாட்சி அரசியலமைப்பின் படி தான் நாங்கள் தொடர்ந்தும் பேச வேண்டுமென்தால் அதனைக் கைவிட வேண்டுமென்றே படியாலே நாங்கள் வெளியெற்றப்பட்டோம் அப்படி இல்லை.

இந்த ஆவணத்திலே தெளிவாக நாங்கள் ஒற்றையாட்சியை நிராகரிக்கிறோம் என்று சொல்லியிருக்கிறோம் அதிலே எந்தவிதமான மயக்கமும் இல்லை. எந்தவிதமான சந்தேகமும் இருப்பதற்கு இடமில்லை.

ஆகையினால் தான் நாங்கள் அதிலே உறுதியாக இருந்தோம். எங்கள் மனதிலே அதைக் குறித்து எந்தவிதமான சந்தேகமும் இருந்திருக்கவில்லை.

குறித்த ஒரு சில ஆவணங்களை முதன்மைப்படுத்தி அதை நிராகரிக்க வேண்டுமென்று சொல்லுவது பொருத்தமற்றது.

அது நாங்கள் செய்கிற இந்த முயற்சிக்கும் சம்மந்தப்படாத ஒரு விடயமாகத் தான் நாங்கள் அதனைப் பார்த்தோம். ஆகையினால் ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்கு நாங்கள் இணங்கமாட்டோம் என்பது தெட்டத் தெளிவாக இந்த ஆவணத்திலே சொல்லப்பட்டிருக்கிறது.

சுரேஸ் பிரேமச்சந்திரன்

இதிலே இன்னுமொரு விடயத்தை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் வைத்த பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை அனைத்தும் இந்த ஆவணத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இன்னும் சொல்வதாக இருந்தால் ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி தமிழ் மக்களுடைய இறையாண்மை சுயநிர்ணய உரிமை என இவை அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட வகையிலான ஒரு தீர்வு அவசியமென மிகத் தெளிவான வார்த்தைகளால் விளங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஆகவே அந்த வகையில் அவர்கள் நாங்கள் என எல்லொருமே இணைந்து அந்த வசனங்களை கடந்த பல தடவை பேசி தான் இறுதி வடிவத்தை எட்டியிரக்கின்றது.

ஆகவே அந்த வகையில் ஒற்றையாட்சி அல்லது இடைக்கால அறிக்கை என்ற விசயம் ஐனாதிபதித் தேர்தல் என்று வருகின்ற இந்தப் பரப்பிற்குள் இப்பொழுது தேவையில்லை என்பது பெரும்பாலான கட்சிகளுடைய வியாக்கியானமாக இருந்தது.

அதில் முக்கியமாக பல்வேறுபட்ட தரப்புக்கும் பல்வெறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் கூட நாங்கள் எல்லொரும் ஒன்றிணைந்த போக வேண்டுமென்ற வகையில் ஒரு பொது உடன்பாடுகளுக்கு வந்த அந்தப் பொது உடன்பாடுகளை உள்ளடக்கியதாகத் தான் இந்த ஆவணம் என்பது தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

அகவே நாங்கள் ஆறு பேரும் ஒன்றாகப் போக வேண்டுமென்று அவர்களுக்கு மிக இறுதிவரை நாங்கள் சொல்லியிரந்தோம். ஆனால் அவர்கள் அதற்கு இணங்கவில்லை என்பது தான் உண்மை.

எம்.ஏ.சுமந்திரன்

ஆறு கட்சிகளும் ஒன்றாக இருக்க வேண்டுமென்பதற்காகத் தான் நேற்றைய தினத்தில் இருந்த இன்றைய தினம் வரை நாங்கள் முயற்சி எடுத்தோம். நேற்றைய தினம் நாங்கள் சந்தித்த வேளையின் ஆரம்பத்திலேயே ஐந்து கட்சிகளும் இந்த வரைபிற்கு இணக்கம் தெரிவித்து விட்டன.

அது அரைமணித்தியாலத்திலே நாங்கள் செய்த முடித்துவிட்டு போயிருந்திருக்கலாம். ஆனால் ஆறாவது கட்சியும் இதில் இணங்கிப் போக வேண்டுமென்பதற்காகத் தான் நேற்று அவர்கள் கேட்டுக் கொண்ட அனைத்தையும் நாங்கள் முன்னெடுத்தோம். அதே போல இன்றைக்கும் முன்னெடுத்தோம். நேற்றைய தினம் நாங்கள் சந்திப்பதற்கு முன்னதாக அவர்கள் இந்தத் தேர்தல் பகிஸ்கரிக்க வேண்டுமென்று அவர்கள் தங்களுடைய முடிவை ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.

ஆகவே ஆரம்பத்தில் அதைக் குறித்த உரையாடலும் இருந்தது. அதாவது அவர்கள் ஏற்கனவே முடிவெடுத்திருக்க அதற்குப் பிறகு வேட்பாளர்களிடத்தே போய் எப்படியாகப் பேசுவது என்ற கேள்வியும் இருந்தது. அப்படி இருந்த போதிலும் கூட இந்த ஆணவத்திலேயாவது நாங்கள் ஒன்றுபட்டு வர வேண்டுமென்பதற்காக ஆரம்பத்திலே அந்த ஆவணத்தில் இணங்கியிருந்தாலும் ஏறத்தாழ பல மணி நேரம் ஒதுக்கி பேசினோம். ஆந்த ஒரு கட்சியையும் எப்படியாவது சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக எடுத்த முயற்சி தான் அந்த எட்டு மணித்தியால முயற்சி.

ஆகவே மாணவர்களை எவரும் குறை சொல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் இதிலே முழுமையாக தங்களுடைய செயற்பாட்டைக் காட்டியிருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரையிலேயும் இந்த இணக்கப்பாட்டிற்காக அதாவது நாங்கள் ஏற்கனவே இணங்கியிருந்த போதிலும் அவர்களையுமு; சேர்த்துக் கொள்வதற்காக எங்களால் இயன்ற அனைத்த முயற்சிகளையும் எடுத்தோம். அவர்கள் கேட்டக் கொண்ட எல்லா விடயங்களையும் நாங்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE