Thursday 28th of March 2024 12:45:04 PM GMT

LANGUAGE - TAMIL
முன்னாள் சாம்பியன் கொல்கத்தாவை வீழ்த்தியது கேரளா அணி!

முன்னாள் சாம்பியன் கொல்கத்தாவை வீழ்த்தியது கேரளா அணி!


இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி கேரள அணி தனது பயணத்தை வெற்றியோடு தொடங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகளில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., சென்னை எப்.சி, அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஜாம்ஷெட்பூர், ஒடிசா எப்.சி. மும்பை சிட்டி, ஐதராபாத் எப்.சி. ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த போட்டிகள் நேற்று கொச்சி நேரு ஸ்டேடியத்தில் தொடங்கியது. தொடக்க விழாவை ஒட்டி கலை நிகழ்ச்சிகள், நடனம் ஆகியவை இடம் பெற்றது. இதையடுத்து இரவில் நடந்த முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியுடன் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி மோதியது. கேரளா அணிக்கு 6-வது நிமிடத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

கொல்கத்தா வீரர் கார்ல் மெக்ஹக் அட்டகாசமாக கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். ஜாவியர் ஹெர்னாண்டஸ் தூக்கியடித்த பந்தை அகஸ்டின் இனிஹஸ் தலையால் முட்டி தர அதை கார்ல் மெக்ஹக் வெகு லாவகமாக கோலுக்குள் உதைத்து தள்ளினார். இந்த கோல் ஐ.எஸ்.எல். வரலாற்றில் கொல்கத்தாவின் 100-வது கோல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த கோலுக்கு பதிலடி கொடுப்பது போல் 30வது நிமிடத்தில் கேரளாவுக்கு 30-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க விடுவோமா என்று கேப்டன் பார்தலோமேவ் ஒக்பேச் கோல் அடித்தார். இதையடுத்து மைதானத்தில் குழுமியிருந்த 35 ஆயிரத்திற்கும் மேலான ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். அடுத்த 15-வது நிமிடத்தில் பார்தலோமேவ் ஒக்பேச் மீண்டும் ஒரு கோல் அடித்து ரசிகர்களின் கைதட்டுக்களை அள்ளினார்.

முதல் பாதியில் கேரளா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. பந்து அதிகமான நேரம் கேரளா வீரர்கள் கால்களிலேயே சிக்கி சுற்றிக் கொண்டு இருந்தது. ஆட்டத்தின் பின்பகுதியில் இரு அணி வீரர்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்தாலும் கோல் அடிக்க முடியாத நிலையே நீடித்தது. இதையடுத்து கேரளா 2-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணியை வெற்றிக் கொண்டது.

பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.- நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.


Category: விளையாட்டு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE