Thursday 28th of March 2024 11:26:37 AM GMT

LANGUAGE - TAMIL
கார்த்தியை வைத்து கைதி, இப்போ விஜய்யின் படம்!

கார்த்தியை வைத்து கைதி, இப்போ விஜய்யின் படம்!


விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் பணியில் பரபரவென்று பம்பரமாக சுற்றி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக நடிகர் கமலை வைத்து படம் இயக்க உள்ளதாக வெளியான தகவல்களால் கோலிவுட்டே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

மாநகரம் படத்தை இயக்கி ரசிகர்கள் தன் பக்கம் ஈர்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளி. தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்த இவர் இயக்கி கடந்த தீபாவளிக்கு வெளியான கைதி படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கு அடுத்ததாக விஜய்யை வைத்து ‘தளபதி 64’ படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு டெல்லியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் பணிகளில் மிகவும் பிஸியாக உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் இவர் அடுத்ததாக கமலை வைத்து படம் இயக்க இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வில் கமல் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளார் என்று பேசப்படுகிறது. அடுத்தடுத்து முன்னணி கதாநாயகர்களை இயக்கும் லோகேஷ் கனகராஜை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர் கோலிவுட்வாசிகள். கமலை வைத்து இயக்கும் படம் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE