Saturday 20th of April 2024 02:11:09 AM GMT

LANGUAGE - TAMIL
கடந்த சில நாட்களிற்கு முன்னர் பெய்த மழை காரணமாக 8959 குடும்பங்களை சேர்ந்த 28764 பேர் பாதிப்பு!

கடந்த சில நாட்களிற்கு முன்னர் பெய்த மழை காரணமாக 8959 குடும்பங்களை சேர்ந்த 28764 பேர் பாதிப்பு!


கடந்த சில நாட்களிற்கு முன்னர் பெய்த மழை காரணமாக 8959 குடும்பங்களை சேர்ந்த 28764 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இதேவேளை 06 வீடுகள் முழுமையாகவும், 137 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளி விபரம் மேலும் தெரிவிக்கின்றது. கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 4259 குடும்பங்களை சேர்ந்த 13754 பே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் மரணமைந்துள்ளதுடன. மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 04 வீடுகள் முழுமையாகவு்ம, 118 வீடுகள் பகுதியளவிலும் சேதமாகியுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 4045 குடும்பங்களை சேர்ந்த 13121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 02 வீடுகள் முழுமையாகவு்ம, 17 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 319 குடும்பங்களை சேர்ந்த 917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 336 குடும்பங்களை சேர்ந்த 972 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 02 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தள்ளதாக இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. பாதிக்கப்பட்டவர்களிற்கான உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மாங்குளம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மழை பெய்துள்ளமையால் இரணைமடு குளத்திற்கு மேலும் நீர் வருகை தருகின்றது. இதன் காரணமாக இன்று காலை இரணைமடு குளத்தின் 8 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளனர். இரண்டு கதவுகள் 1'06" ஆகவும், மற்ற இரு கதவுகள் 1'-00" ஆகவும், நான்கு கதவுகள் 0'-06" ஆகவும் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கண்டாவளை, ஊரியான் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் வெள்ள நீர் உட்புகுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE