Thursday 25th of April 2024 09:07:41 AM GMT

LANGUAGE - TAMIL
முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலாசார பேரவையும் இணைந்து செய்த  பண்பாட்டு பெருவிழா!

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலாசார பேரவையும் இணைந்து செய்த பண்பாட்டு பெருவிழா!


முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலகமும் பிரதேச செயலக கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டு பெருவிழா இன்று பாரம்பரிய கலைவிழிப்புணர்வு பவணியுடன் பகல் இடம்பெற்றது.

துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் குறித்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் என்பவற்றின் அனுசரணையுடன் துணுக்காய் பிரதேச செயலகமும் கலாச்சாரப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டுப்பெருவிழா குறித்த விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.

துணுக்காய் பிரதேச செயலாளர் திருமதி ச.லதுமீரா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மைவிருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் வடமாகாணத்தின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் முன்னதாக முதன்மை விருந்தினர்கள் சிறப்பு விருந்தினர்கள் பிரதான வீதியிலிருந்து பாரம்பரிய கலைகளையும் வாழ்க்ககை முறைகளையும் சித்தரிக்கும் ஊர்தி பவணிகளுடன், அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து பிரதேசத்தின் பல்துறை சார்ந்தோர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மருதோவியம் இதழ் 03 நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் பன்டார வன்னியன் வரலாற்று நாடகம் மற்றும் கலைநிகழ்வுகளும் நடை பெற்றுள்ளன. இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகதர்கள் திணைக்களத்தலைவர்கள் பாடசாலை மாணவர்கள் கலைஞர்கள் படைப்பாளிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE