Thursday 28th of March 2024 02:13:07 PM GMT

LANGUAGE - TAMIL
அகதிகள் சென்ற படகு மூழ்கி 15 பேர் பலி!

அகதிகள் சென்ற படகு மூழ்கி 15 பேர் பலி!


பங்களாதேஷில் இருந்து மலேசியா நோக்கிச் சென்ற ரோஹிங்கியா அகதிகள் படகு நேற்று நடுக்கடலில் மூழ்கியதில் 15 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மியான்மார் அரசின் இனப்படுகொலை நடவடிக்கையில் இருந்து தப்பி பங்களாதேஷ் சென்ற ரோஹிங்கியா அகதிகள் அங்குள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கபட்டிருந்தனர்.

இவ்வாறு தங்க வைக்கபட்டிருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 122 பேர் மலேசியாவுக்கு படகில் செல்ல முற்பட்ட போதே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவை கடக்க முற்பட்டபோது படகு கடற்கொந்தளிப்பில் சிக்கி நடுக்கடலில் மூழ்கியுள்ளது. இது தொடர்பில் தகவலறிந்த பங்களாதேஷ் கடற்படையினர் மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரையில் உயிரிழந்த 15 ரோஹிங்கியா அகதிகளின சடலங்களையும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 67 பேரையும் மீட்டுள்ளார்கள். காணாமல் போன மீதமானவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பங்களாதேஷ் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஹமிதுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஓகஸ்ட்டில் மியான்மாரில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து ஏழு இலட்சத்திற்கு அதிகமான ரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE