Thursday 18th of April 2024 01:09:58 PM GMT

LANGUAGE - TAMIL
சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்ப விழாவில் சீமான்!

சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்ப விழாவில் சீமான்!


வெங்கட் பிரபு இயக்கத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்விற்கு நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும் திரைத்துறை பிரபலமுமான சீமான் கலந்து கொண்டிருந்தமை பலரதும் கவனத்தைப் பெற்றுள்ளது.

பல்வேறு காரணங்களால் தடைப்பட்டிருந்த ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூசையுடன் ஆரம்பமாகியது.

மாநாடு படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் போன்ற பிரபலங்கள் நடிக்க உள்ளதாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பிரதாயபூர்வமாக மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூசையுடன் ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கேற்றிருந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும் திரைத்துறை பிரபலமுமான சீமானும் கலந்து கொண்டிருந்தார்.

IMAGE_ALT


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE