சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பை நடாத்த ரஷ்ய அரசு தடைவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இந்த தடை விதிக்கப்பட்டதால் போன வேகத்திலேயே படக்குழுவினர் இந்திய திரும்பியுள்ளனர்.
சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து அடுத்த கட்ட படப்பிடிற்காக ரஷ்யாவிற்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து தலைமையிலான படக்குழுவினர் சமீபத்தில் சென்றிருந்தனர்.
இந்நிலையில் அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டு உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் தயாராகும் இப்படம் வரும் மே மாதம் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ரஷ்யாவில் படப்பிடிப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ள சூழலில் வெளியீடு தாமதமாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.