Friday 19th of April 2024 05:06:19 AM GMT

LANGUAGE - TAMIL
Astrology
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -24.03.2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? -24.03.2020


இன்று! விகாரி வருடம், பங்குனி மாதம் 11ம் திகதி, ரஜப் 28ம் திகதி, 24.3.2020 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, அமாவாசை திதி பகல் 3:33 வரை, அதன்பின் பிரதமை திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் நாளை அதிகாலை 4:37 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம், அமிர்த - சித்தயோகம்

நல்ல நேரம் :காலை மணி 7.30 முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் மணி 3.00 மாலை முதல் 4.30 மணி வரை. எமகண்டம் : காலை மணி 9.00 முதல் காலை 10.30 மணி வரை. குளிகை : பிற்பகல் மணி 12.00 முதல் பிற்பகல் 1.30 மணி வரை. சூலம் : வடக்கு

• பரிகாரம் : பால் • சந்திராஷ்டமம் : பூரம் • பொது துர்கை வழிபாடு, அமாவாசை, முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், நதி, கடல் நீராடல் சிறப்பு.

-

மேஷம்

உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி மறந்து செயல்படுவார். குடும்பத்தினர் சொல்லும் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டுப் பெறுவர்.

ரிஷபம்

வாழ்வில் வளம் பெற புதிய வழி பிறக்கும். பிறர் வியக்கும் வகையில் பணிகளை நேர்த்தியாக செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாக இருக்கும். உபரி பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள்.

மிதுனம்

இஷ்ட தெய்வ அருள் பல நன்மைகளை தரும். கடந்த காலத்தில் அவமதித்து பேசியவர் அன்பு பாராட்டுவார். தொழிலில் உருவான தாமத நிலை மறையும். பணவரவுடன் கூடிய நன்மையும் இருக்கும். உடல் ஆரோக்கியம் பலம்பெறும்.

கடகம்

வீண்பேச்சு பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழிலில் உருவாகும் இடையூறை சரிசெய்வதால் உற்பத்தி, விற்பனை சீராக இருக்கும். சிறு அளவில் கடன் பெறுவீர்கள். சீரான ஓய்வு உடல் நலத்தை காக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

சிம்மம்

ஒருமுகத் தன்மையுடன் பணிபுரிவது அவசியம். சக தொழில் சார்ந்தவரிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் கொள்வர். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை செலுத்துவர்.

கன்னி

மனதில் அன்பு அதிகரிக்கும். தன்னைச் சார்ந்தவர்களுக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பான முறையில் இருக்கும். பணப்பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.

துலாம்

உங்கள் நலம் விரும்புவரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். தாராள அளவில் பணவரவை பெறுவீர்கள். மனைவி விரும்பிக் கேட்ட வீட்டு உபயோகப் பொருளை வாங்கி தருவீர்கள்.

விருச்சிகம்

பணிகள் நிறைவேற கூடுதல் கவனமும், உழைப்பும் அவசியமாகும். தொழிலில் உருவாகும் இடையூறை நண்பரின் உதவியால் சரிசெய்வீர்கள். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். பொருட்களை கடனாக கொடுக்க, வாங்க வேண்டாம்.

தனுசு

எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதில் சிறு தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணப் பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றவும். உணவுப் பொருளை தரம் அறிந்து உண்பது நல்லது.

மகரம்

உயர்ந்த எண்ணங்களுடன் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அபரிமிதமான வளர்ச்சி பெறும். பணவரவுடன் நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்கும் நல்யோகம் உண்டு.

கும்பம்

சிலர் கூறும் குறைகளை பொருட்படுத்த வேண்டாம். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். குடும்பத் தேவைக்கான பணச்செலவு அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் பயிற்சியை மேற்கொண்டு நல்ல மதிப்பெண் பெறுவர்.

மீனம்

நண்பரிடம் ஆன்மிக கருத்துக்களை பேசுவீர்கள். மனதில் எதிர்கால வாழ்க்கை குறித்த நம்பிக்கை ஏற்படும். தொழிலில் உற்பத்தி, விற்பனையின் இலக்கு குறிப்பிட்ட காலத்தில் நிறைவேறும். பணியாளர்கள் கூடுதலாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர்.


Category: வாழ்வு, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE