Sunday 5th of May 2024 05:26:34 AM GMT

LANGUAGE - TAMIL
.
22வது கொமன்வெல்த் போட்டிகள் நிறைவு - 178 பதக்கங்களுடன் ஆஸி. முதலிடம்!

22வது கொமன்வெல்த் போட்டிகள் நிறைவு - 178 பதக்கங்களுடன் ஆஸி. முதலிடம்!


இங்கிலாந்தில் ஆரம்பமாகி நடைபெற்று வந்த 22வது கொமன்வெல்த் போட்டிகள் நேற்று நிறைவடைந்துள்ள நிலையில் அவுஸ்திரேலியா 178 பதக்கங்களுடன் முதலிடத்தை பெற்றுள்ளது.

72 நாடுகள் பங்கேற்ற 22வது கொமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த 28ம் தேதி பிரமாண்டமான தொடக்க விழாவுடன் இங்கிலாந்தின் பர்மிங்காமில் தொடங்கியது.

போட்டிகள் நேற்று நிறைவடைந்துள்ள நிலையில், இந்த தொடர் இன்று நிறைவு விழாவுடன் முடிவடைகிறது.

போட்டி தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலியா 67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம் என மொத்தம் 178 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

இங்கிலாந்து 56 தங்கம், 64 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 173 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

கனடா 26 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 92 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது.

நியூசிலாந்து 20 தங்கம், 12 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தம் 49 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது.

இதேவேளை, இலங்கை சார்பில் ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என நான்கு பதக்கங்களுடன் 31வது இடதத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE