Sunday 5th of May 2024 12:10:11 PM GMT

LANGUAGE - TAMIL
-
ஆசியக் கிண்ணம்; ஹொங்கொங் அணியை வெற்றிகொண்டது இந்திய அணி!

ஆசியக் கிண்ணம்; ஹொங்கொங் அணியை வெற்றிகொண்டது இந்திய அணி!


நடைபெற்றுவரும் இருபத்துக்கு இருபது ஆசியக்கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற இந்திய அணிக்கும் ஹொங்கொங் அணிக்கும் இடையிலான போட்டியில் இந்திய அணி 40 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கட் இழப்புக்கு 192 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் சூரியகுமார் யாதவ் 68 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதனையடுத்து 193 என்ற இலக்கை நோக்கி துடுப்பாடிய ஹொங்கொங் அணி 20 ஓவர்களில் 5 விக்கட் இழப்புக்கு 152 ஓட்டங்களை பெற்றது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE