Sunday 5th of May 2024 08:32:42 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஆசியக் கிண்ணம் வென்றது இலங்கை அணி!

ஆசியக் கிண்ணம் வென்றது இலங்கை அணி!


ஆசிய கிண்ண ரி20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வெற்றிகொண்டு இலங்கை அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹசரங்க 21 பந்துகளில் 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தனஞ்ச டி சில்வா 28 ஓட்டங்கள்.

பந்து வீச்சில் ஹரிஷ் ரஹூப் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

நஷீம் ஷா, சதாப் கான் மற்றும் இப்திகர் அஹமட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண ரி20 தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 171 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஷ்வான் அதிகபட்சமாக 55 ஓட்டங்களையும் இப்திகர் அஹமட் 32 ஓடட்ங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் பிரமோத் மதுஷான் 4 விக்கெட்டுக்களையும் மற்றும் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

அதன்படி, ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி 6 முறையாகவும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE