Saturday 4th of May 2024 11:46:14 AM GMT

LANGUAGE - TAMIL
-
சீனாவில் இன்று அதிகாலை பேருந்து  கவிழ்ந்து விபத்து; 27 பேர் உயிரிழப்பு!

சீனாவில் இன்று அதிகாலை பேருந்து கவிழ்ந்து விபத்து; 27 பேர் உயிரிழப்பு!


தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான குய்சோவ் (Guizhou) மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர் என குய்சோவ் மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாகாண தலைநகரான குயாங்கிற்கு தென்கிழக்கே 170 கி.மீ . தொலைவில் உள்ள சாண்டு பகுதியில்இந்த விபத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய பேருந்தில் 47 பேர் பயணித்தனர். காயமடைந்த 20 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE